அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்ததாக தகவல்
ADDED : 1129 days ago
பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கினார். இந்தப் படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்ட்டிகள் 15' படத்தின் தமிழ் ரீமேக். கொரோனாவினால் அருண்ராஜாவின் மனைவி சிந்து மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது திருமணம் கடந்த 28ம் தேதி நடைபெற்றுள்ளதாம். திருமணம் பற்றிய அறிவிப்பை விரைவில் அருண்ராஜா வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.