அமீர்கானின் தாயாருக்கு மாரடைப்பு : உடல்நிலை குறித்து முக்கியத் தகவல்
ADDED : 1080 days ago
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'லால்சிங் சத்தா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே தனது குடும்பத்துடன் தீபாவளியை நடிகர் அமீர்கான் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் இருந்தார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அமீர்கானின் தாயார் ஜீனத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். ஜீனத்தை சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.