மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1038 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1038 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1038 days ago
பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் (70). கடந்த 50 ஆண்டுகளாக பல நாடுகளில், பல மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசுகளின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் இசையில் இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றி அருணா சாய்ராம் கூறுகையில், ‛‛இதுபோன்ற உயரிய விருது பெறுவதில் மகிழ்ச்சி. நான் செய்யும் பணியை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இந்த விருது வழங்குகிறது. பிரான்ஸ் அரசுக்கு நன்றி'' என்றார்.
1038 days ago
1038 days ago
1038 days ago