மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1038 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1038 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1038 days ago
தமிழ் சினிமாவில் கடந்த இருபது வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் 1 நடிகையாக இல்லை என்றாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த '96' படம் அவர் நம்பர் 1 கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படும் அளவில் நடித்திருந்தார் த்ரிஷா. அக்கதாபாத்திரத்தில் அவர் ஒப்பந்தமான போது கிண்டலடித்தவர்கள் கூட படத்தைப் பார்த்ததும் பாராட்டினார்கள். இப்படம் மூலம் த்ரிஷாவின் மார்க்கெட் நிலவரம் மேலும் உயர்ந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்யின் 67வது படத்தில் அவர்தான் கதாநாயகி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் த்ரிஷா நடித்து கடந்த சில வருடங்களாக வெளிவராமல் முடங்கிப் போயுள்ள அவருடைய படங்கள் எப்படியாவது மீண்டு வருமா என்று கோலிவுட்டிலும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ராங்கி' ஆகிய படங்கள் முடிவடைந்து சில பல ஆண்டுகள் ஆகியும் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமல் உள்ளன. இவற்றில் 'ராங்கி' படம் இன்னும் வெளிவராமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
'ராங்கி' படத்தின் டீசர், 'கர்ஜனை' படத்தின் டிரைலர், வெளியாக மூன்று வருடங்களும், 'சதுரங்க வேட்டை 2 ' டீசர் வெளியாகி ஐந்து வருடங்களும் ஆகிறது.
1038 days ago
1038 days ago
1038 days ago