சன்னி லியோனுடன் குத்தாட்டம் போட்ட வீஜே பாரு
ADDED : 1064 days ago
இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற வீஜேவான பாரு என்கிற பார்வதி, சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். தற்போது மாடலிங்க், ஆக்டிங் என முயற்சித்து வரும் பாரு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதன்மூலம் பல சினிமா செலிபிரேட்டிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டு அதை தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தின் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் சன்னிலியோனுடன் சேர்ந்து போட்டுள்ள குத்தாட்டத்தை பார்க்கும் பலரும் 'இது சரியான காம்போ' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.