மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1064 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1064 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1064 days ago
கடந்த 2009ம் ஆண்டில் வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் படம் பார்த்து அனைவரையும் பிரமிக்க வைத்தது. படம் வெளியான அந்த சமயத்திலேயே இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையை அப்போது பெற்றது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் அவதார்-தி வே ஆப் வாட்டர் என்கிற பெயரில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படம் வெளியாகும் நாளில் இந்தப்படத்துடன் தனது பாரோஸ் பட டிரைலரை தியேட்டர்களில் இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளார் நடிகர் மோகன்லால். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் மோகன்லால், தற்போது பாரோஸ் என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
வாஸ்கோடகாமா காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார் மோகன்லால். 2023ல் இந்த படத்தை வெளியிடும் திட்டத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் மோகன்லால், இந்த படத்தின் டிரைலரை அவதார் படத்துடன் வெளியிடும்போது ரசிகர்களிடம் இன்னும் கூடுதல் கவனம் பெறும் என்று இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
1064 days ago
1064 days ago
1064 days ago