தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஏஆர் முருகதாஸ்
ADDED : 1221 days ago
தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். குறிப்பாக திருத்தேர் திருவிழாவில், கலந்து கொண்ட முருகதாஸ் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்துள்ளார். தனது குடும்பத்துடன் முருகதாஸ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.