உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வெளியீடு?

பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வெளியீடு?

மணிரத்தினம். இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது . இப்படம் தற்போது வரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதை அடுத்து இப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வெளியானது .

தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் லைகா நிறுவனம் , மணிரத்னம் மற்றும் படக்குழுவினர் சார்பில் நன்றி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !