உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' நிறுத்தப்பட்டதா ?

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' நிறுத்தப்பட்டதா ?

'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன். நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 40 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். வரும் 7ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !