உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கப் போகும் விஷ்ணுவர்தன்!

மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கப் போகும் விஷ்ணுவர்தன்!

தற்போது எச் .வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜித்குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்குமார் தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ்சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித். அந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜித்தின் 63வது படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அஜித்துக்காக தான் தயார் செய்து வைத்திருந்த ஒரு மாஸான கதையை அவரிடத்தில் சொல்லி ஓகே பண்ணிவிட்டார் விஷ்ணுவர்தன். அதனால் விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அஜித்தை விஷ்ணுவர்தன் இயக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !