மீண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 1100 days ago
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தமிழில் மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 1ம் தேதி குற்றாலத்தில் துவங்க இருக்கிறது. அப்போது கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .