உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாதிகளே இல்லாத மதம் - புத்தம் மதம் மாறியது பற்றி சாய்தீனா

ஜாதிகளே இல்லாத மதம் - புத்தம் மதம் மாறியது பற்றி சாய்தீனா

‛கொம்பன், தெறி' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் சாய்தீனா. சமூகபணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினர் உடன் புத்த மதத்திற்கு மாறினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலானது. மதம் மாறியது பற்றி அவர் கூறியுள்ளதாவது: ‛‛நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்தாண்டுகளாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன். நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான். இந்தியாவில் மூன்று மதங்கள் தான் இருக்கிறது என சொல்வது தவறு. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை''. என்கிறார் சாய் தீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !