ஓடிடி-யில் வெளியாகும் காந்தாரா
ADDED : 1055 days ago
கன்னடத்தில் சமீபத்தில் வெளியான காந்தாரா படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள காந்தாரா திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார் ரிஷப் செட்டி. இந்த படத்திற்கு ரஜினி, தனுஷ், சிம்பு, கார்த்தி, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'காந்தாரா' படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.