உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் கமல் அனுமதி, ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் கமல் அனுமதி, ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

70 வயதை நெருங்கும் கமல்ஹாசன் தற்போதும் இளைஞரைப்போல சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்தியன் 2வில், 3 மணி நேரம் மேக்அப் போட்டு நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொய்வின்றி நடத்தி வருகிறார். மக்கள் நீதி மையம் கட்சி பணியை செய்கிறார். பல படங்களை தயாரிக்கிறார். இத்தனைக்கும் நடுவில் குடும்ப நிகழ்ச்சிகள், ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் என பிசியாக இருக்கிறார்.

ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், அங்கு இயக்குனர் கே.விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அளித்தனர். ஆனால் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் லேசான காய்ச்சல் இருந்தததாக தகவல் வந்தது.

இந்நிலையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛காய்ச்சல் மற்றும் சளி தொற்றால் நடிகர் கமல்ஹாசன் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமாகி வருகிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று(நவ., 24) காலை 6:30 மணி அளவில் கமல்ஹாசன் வீடு திரும்பியதாகவும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !