திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர்
ADDED : 1139 days ago
‛அண்ணாத்த' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வரும் ரோபோ சங்கர், தனது திருமணநாளை ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி இருக்கிறார். இதில் ஜெயிலர் படக்குழுவினர் மட்டுமின்றி ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது அவர்கள் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.