உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி

தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொத்தனேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட கழகத்திற்கு 2 படங்களை தயாரித்து கொடுக்கிறார்.

இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள்.

என்.எப்.டி.சிக்கு 2 படங்களை இயக்குகிறோம். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது” என்கிறார் லிங்குசாமி.

ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 5 படங்களைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனங்களுடன் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி என்ற அமைப்பும் இணைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !