கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது
ADDED : 1297 days ago
யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக காந்தாரா படத்தை தயாரித்தது. இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று, வசூலை குவித்தது.
இந்த நிலையில் தனது நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‛ரகு தாத்தா' என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன.