திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இளையராஜா
ADDED : 1033 days ago
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தற்போது வெற்றிமாறனின் விடுதலை, வெங்கட் பிரபு இயக்கும் படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ராஜ்சபா நியமன எம்பி.,யான இளையராஜாவுக்கு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் இளையராஜா. சாமி தரிசனம் செய்வதற்காக அவர் அந்த கோயிலுக்குள் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.