மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1029 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1029 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1029 days ago
புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான வெப் தொடர் வதந்தி. இந்த தொடரின் நாயகியின் பெயர் வெலோனி. அழகு நிறைந்த 20 வயது இளம் பெண் வெலோனி மர்மமான முறையில் கொல்லப்பட்டு ஒரு திறந்த வெளியில் கிடக்க அவளை கொன்றவர் யார்? என்பதை சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடிப்பதுதான் கதை. இந்த கதையின் வாயிலாக வெலோனியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. தொடர் பிரபலமானதை போன்றே அதில் வெலோனியாக நடித்த சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் வெளிச்சத்துக்கு வந்திருகிறார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஊட்டி. படுகா இனத்தை சேர்ந்தவர். பிறந்தது ஊட்டியாக இருந்தாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில். படித்துக் கொண்டே யு டியூப் சேனல்களின் ஒளிபரப்பான சிறு தொடர்களில் நடித்தார். இதன் மூலம் யு டியூப் ஏரியாவில் பிரபலமானார். அந்த யு டியூப் தொடர்களை கவனித்த இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அழைத்து வந்த வெலோனி ஆக்கிவிட்டார்.
“யூடியூபில் நடிப்பு என்று இறங்கியபோது அப்பா, அம்மா விரும்பவில்லை.. ஆனால், 'வதந்தி' வலைத் தொடருக்கான வாய்ப்பு வந்தபோது, கதையையும் எனது கதாபாத்திரத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இது சாதாரண வாய்ப்பு இல்லை என்பதால் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார் சஞ்சனா.
1029 days ago
1029 days ago
1029 days ago