மதுரையில் நடைபெறும் ஜிகர்தண்டா 2 பட பூஜை
ADDED : 1033 days ago
தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து 2014ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருந்தார். மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .