மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1003 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1003 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1003 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்' நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. முதல் மூன்று சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்' நிகழ்ச்சிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகிலா - பிரிட்டோ, நிஹாரிகா- கென்னி, பிரீத்தா சுரேஷ் - டொமினிக், வைஷ்ணவி - அவினாஷ் மற்றும் சரவண முத்து - தீக்ஷிகா ஆகியோர் இறுதிப்போட்டியில் தங்கள் முழுத்திறமையுடன் பலபரீட்சை செய்யவுள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த இறுதிச்சுற்றில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதற்கான போஸ்டர்களும் புரோமோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகிறது.
1003 days ago
1003 days ago
1003 days ago