மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1000 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1000 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1000 days ago
கடந்த வருடம் மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. இளம் இயக்குனர் பசில் ஜோசப் இந்த படத்தை இயக்கியிருந்தார். கிராமத்தில் உள்ள இரண்டு இளைஞர்களுக்கு திடீரென மின்னல் தாக்கியதால் சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும் ஒருவர் அதை எதிர்மறையாக பயன்படுத்த, அவரிடமிருந்து மக்களை காப்பாற்ற ஹீரோ தன்னிடம் இருக்கும் பவரை பயன்படுத்துகிறார்.. இதில் யாருக்கு வெற்றி என்பதாக கதை உருவாக்கப்பட்டிருந்தது.
மலையாளத் திரையுலகில் இது புதிய முயற்சி என்பதால் ரசிகர்களிடம் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்ல தென்னிந்திய அளவிலும் பாலிவுட்டிலும் உள்ள முக்கிய திரையுலக ஜாம்பவான்கள் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார்கள். தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியன் அகாடமி 2022 விருது வழங்கும் விழாவில் இந்த படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார் பசில் ஜோசப். கிட்டத்தட்ட 16 நாடுகளில் இருந்து கலந்து கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து இந்தியாவில் அதிலும் மலையாளத்தை சேர்ந்த பசில் ஜோசப் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட பசில் ஜோசப் இதுபற்றி கூறும்போது, “மலையாள திரையுலகில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதில் இப்போது ரொம்பவே பெருமைப்படுகிறேன். மலையாள திரையுலகம் மூலமாக இந்தியாவை இந்த மேடையில் முன்னிறுத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது இன்னும் உலகளாவிய படங்களை தருவதற்கான உந்துகோலாக எனக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.
1000 days ago
1000 days ago
1000 days ago