பிச்சைக்காரன் 2 பட குழுவினர் மூன்று பேர் கைது ஏன்?
ADDED : 1026 days ago
2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ரிப்பன் பில்டிங் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் பிச்சைக்காரன்- 2 குழுவினர் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் துறையினர் ட்ரோன்களை இயக்கிய சுரேஷ், நவீன் குமார், ரூபேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து அதன் பிறகு ஜாமீனில் விடுவித்துள்ளார்கள்.