மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
993 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
993 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
993 days ago
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சுவாரியர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அசுரன் படம் மூலமாக தமிழிலும் அடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து தற்போது அஜித் ஜோடியாக துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மலையாளத்தில் தற்போது ஆயிசா என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அதேசமயம் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் மஞ்சுவாரியர். சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் அஜித் உள்ளிட்ட குழுவினருடன் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பைக் பயணம் மேற்கொண்டார் மஞ்சுவாரியர்.
இந்த நிலையில் தற்போது பெத்லகேம் நகரில் முகாமிட்டுள்ள மஞ்சுவாரியர், அங்கு உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ததுடன் பெத்லகேம் தெருக்களில் ஜாலியாக சுற்றி திரிந்ததை ஒரு வீடியோவாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு குழந்தை மனம் கொண்ட சிறு பெண்ணாக மாறி, மஞ்சுவாரியர் இந்த பயணத்தை என்ஜாய் செய்திருப்பது அந்த வீடியோவில் பளிச்சென தெரிகிறது.
993 days ago
993 days ago
993 days ago