மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
993 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
993 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
993 days ago
இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், அவரது மனைவி நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் 'கனெக்ட்'. இப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
99 நிமிடங்கள், அதாவது ஒரு மணி நேரம் 39 ஓடக் கூடிய இந்தப் படத்தில் இடைவேளை கிடையாது என்று படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். த்ரில்லர் படமான இப்படத்தை இடைவேளை இல்லாத படம் என்றே குறிப்பிட்டு படக்குழுவும் பேசி வருகிறது. ஆனால், தியேட்டர்காரர்கள் தரப்பில் இடைவேளை இல்லாமல் படத்தைத் திரையிட மறுப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
இடைவேளையில் கேண்டீன் பக்கம் ரசிகர்கள் வந்தால்தான் அங்கு உணவுப் பொருட்களின் வியாபாரம் நடந்து அதில் தனி லாபத்தைப் பெற முடியும். இடைவேளை இல்லாமல் படத்தை வெளியிட்டால் கேண்டீன் வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் படத்தை வெளியிட்டால் நாங்கள் இடைவேளை விட்டே படத்தைத் திரையிடுவோம் என்பதில் தியேட்டர்காரர்கள் உறுதியாக இருப்பதாகத் தகவல். எனவே, இடைவேளை இல்லாத படம் என்பதை படக்குழு இனி பேசுமா என்பது சந்தேகம்தான்.
முதல்பாடல் வெளியீடு
இதனிடையே இப்படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது ‛நான் வரைகிற வானம்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
993 days ago
993 days ago
993 days ago