அவதார் 2 படம் பார்த்த நடிகர் தனுஷ்
ADDED : 1025 days ago
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‛அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் இப்படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் நேற்று அவதார் 2 படத்தை தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பார்த்துள்ளார். மேலும் படம் முடிந்து சென்னை சத்யம் திரையரங்கில் இருந்து தனுஷ் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனுஷ் கேப்டன் மில்லர் பட லுக்கில் இருக்கிறார். இப்படம் 2023 ஜனவரி 3ம் தேதி மீண்டும் துவங்க இருக்கிறது.