தமிழில் அறிமுகமாகும் நியா
மலையாளத்தில் வெளிவந்த பதினொன்னாம் நூற்றாண்டு படத்தில் அறிமுகமானவர் நியா. அதன்பிறகு பூமாராங் படத்தில் நடித்தார். தற்போது மனு சுதாகரன் இயக்கும் இப்படத்தில் ஷைன் டாம் சாக்கோவின் ஜோடியாக நடித்து வருகிறார். ருத்ரேஷ் இயக்கும் 'பிங்க் நோட்' என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்காரகன் என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.
மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகிறது.