விரைவில் வெளியாகிறது துணிவு படத்தின் மூன்றாவது பாடல் ‛கேங்ஸ்டா'
ADDED : 1018 days ago
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரும் நிலையில் வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் என மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த படியாக கேங்ஸ்டா என்று தொடங்கும் பாடல் வெளியாகிறது. இதனை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது வலைதளத்தில் அறிவித்திருக்கிறார். பின்னணி பாடகர் சபீர் பாடியுள்ள இந்த பாடல் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.