ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்
ADDED : 1067 days ago
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்வதே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான். பல பெண்கள் ஹீரோயினாகவும் ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஆஷு ரெட்டி ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. தெலுங்கின் இளம் ஹீரோ அரவிந்த் கிருஷ்ணா 'எ மாஸ்டர் பீஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சுகு பூர்வஜ் இயக்குகிறார், கண்டரகுல ஸ்ரீகாந்த் தயாரிக்கிறார்.