வெளியீட்டுக்கு முன்பே சம்பாதித்த பிச்சைக்காரன்-2
ADDED : 1021 days ago
விஜய் ஆண்டணி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் ‛பிச்சைக்காரன் 2'. சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதனை சசி இயக்க மறுத்துவிட்டதால் விஜய் ஆண்டனியே இயக்குகிறார். இந்த படத்தின சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட் ஒர்க் நிறுவனம் கணிசமான தொகைக்கு வாங்கி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.