உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஆர்.கே.சுரேஷின் மனைவி மாதவிக்கு வளைகாப்பு விழா! மிஷ்கின்-கவுதம் கார்த்திக் பங்கேற்பு!

நடிகர் ஆர்.கே.சுரேஷின் மனைவி மாதவிக்கு வளைகாப்பு விழா! மிஷ்கின்-கவுதம் கார்த்திக் பங்கேற்பு!

பாலா இயக்கிய தாரை தப்பட்டை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். அதன் பிறகு மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், விருமன், பட்டத்து அரசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷின் மனைவி மாதவி சுரேஷுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், நடிகர்கள் கவுதம் கார்த்திக், விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்கள்.

இதுகுறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !