இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 1065 days ago
கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சினிமா பிரபலங்கள் பலருமே தங்கள் கொண்டாட்டத்தை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து ரசிகர்களுடன் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி முதல் முறையாக தங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி உள்ளனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உடை அணிவித்து குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து அதனை விக்கி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, உயிர், உலகம் என கூறி கிறிஸ்துஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .