உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனராகிறார் ராதிகா ஆப்தே

இயக்குனராகிறார் ராதிகா ஆப்தே

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் ஏற்கெனவே படம் இயக்கி வருகிறார். அவர் வரிசையில் அடுத்து வர இருக்கிறார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் துணிச்சலான நடிகை என்று புகழ்பெற்றவர், நிர்வாணமாக கூட நடித்திருக்கிறார்.

தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தின் மூலம் அறிமுகமானார், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், சித்திரம்பேசுதடி 2 படங்களில் நடித்தார். தற்போது படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமா இயக்க வேண்டும் என்பற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகை ஆகிவிட்டேன். இந்த அனுபவத்தை சினிமா இயக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டேன். இதுதவிர முறைப்படி திரைக்கதை எழுதவும், படம் இயக்கவும் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன்.

திரைக்கதை எழுதும் கலை பற்றி படிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதில் இன்னும் நான் முழுமையாகத் தேறவில்லை. சில ஸ்கிரிப்ட் ரைட்டர்களிடம் இதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு படத்தை எழுதி இயக்க விரும்புகிறேன். அதற்காக நடிப்பை கைவிட மாட்டேன். அதுதான் என் முதல் காதல், அடுத்த காதல்தான் படம் இயக்குவது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !