தமிழுக்கு வந்த உஸ்பெகிஸ்தான் வரவு
ADDED : 1015 days ago
எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛ராங்கி'. அதிரடி ஆக் ஷன் கலந்த கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இதில் அந்நாட்டை சேர்ந்த ஆலிம் என்ற இளைஞனை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளார் சரவணன்.
சோஷியல் மீடியா மூலம் பழகும் பழக்கத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எதில் போய் முடிகிறது என்று பரபரப்பாக நகரும் முருகதாஸ் எழுதிய கதையை சரவணன் இயக்கி உள்ளார். இன்றைய காலத்தில் சமூகதுக்கு தேவையான மெசேஜ் ஒன்றையும் இந்த படத்தில் சொல்லி உள்ளனர். படத்தில் திரிஷாவின் நடிப்பிற்கு பின் ஆலிமின் நடிப்பு பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். அந்தளவுக்கு, லவ், எமோஷன் என சிறப்பாக அவர் நடித்துள்ளாராம். நாளை(டிச., 30) வெள்ளியன்று படம் வெளியாகிறது.