நிவின் பாலியிடம் என்ன ஒரு மாற்றம்
ADDED : 1005 days ago
பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நிவின் பாலி. தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமான இவர் நேரம், ரிச்சி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதேதோற்றத்தில் படங்களிலும் நடித்தார். கிட்டத்தட்ட தமிழில் சிம்பு போன்று உடல் பெருத்து இருந்தார். இந்நிலையில் தீவிர உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். நிவின் பாலியின் தற்போதைய ஸ்லிம் போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு மாற்றமா என ஆச்சர்யப்படுவதுடன் அந்த போட்டோவை டிரெண்ட் செய்தனர்.