தமிழுக்கு வரும் தெலுங்கு புதுமுகம்
ADDED : 1079 days ago
தெலுங்கில் வெளிவந்த ஹிட் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் அடிவி சேஷ். அடுத்து இவர் நடிக்கும் படம் ஜி2. எடிட்டர் சிரிகீனிஷ் இயக்குகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி , ஆர்ட்ஸ் மற்றும் ஏ.கே. என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்த படம் பான் இந்தியா படமாகவும் தயாராகிறது.