தனுஷ் இயக்கும் புதிய படத்தின் பெயர் ராயன்
ADDED : 1047 days ago
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை இயக்கிய தனுஷ் தற்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த படத்தை சென்னையில் உள்ள ராயபுரத்தை மையமாகக் கொண்ட கதை களத்தில் இயக்குகிறார். மேலும், ராயன் என்ற பெயரில் உருவாகும் இப்படம் மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை, பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் கதையில் உருவாகிறது. எஸ். ஜே. சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்.