ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
ADDED : 1195 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்து விட்டது. இந்த படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உட்பட பலர் நடிக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் ஒரு வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக இன்னொரு பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் ஜெயிலர் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாளம், கன்னடம், ஹிந்தி நடிகர்கள் நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.