குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம்
ADDED : 984 days ago
நடிப்பு, அரசியல் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை குஷ்பு, அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கும் பயணித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அவரது கண்ணில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போதும் அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில் திடீரென அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் குஷ்பூ. அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதோடு, இந்த காயம் காரணமாக என்னுடைய பயணத்தை நிறுத்தப் போவதில்லை. சாதிக்கும் வரை எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.