சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ்
ADDED : 984 days ago
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தங்கலான் பட பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், தங்கலான் படத்தின் பாடல்களுக்கு மிக உற்சாகமாக இசையமைத்து வருகிறேன். இரண்டு பாடல்களை பதிவு செய்து விட்டேன். இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான சர்வதேச தரத்தில் இந்த படத்திற்கான பாடல்களை உருவாக்கி இருக்கிறேன். அதனால் இதுவரை எனது இசையில் வெளிப்படாத அளவுக்கு இந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.