ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ்
ADDED : 1020 days ago
தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் என்ற படமும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார் செல்வராகவன். அந்த வகையில் முதல் முறையாக அண்ணன், தம்பிகளான செல்வராகவன் நடித்துள்ள படமும், தனுஷ் நடித்துள்ள படமும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.