அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி
ADDED : 1058 days ago
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்காததால் இப்போது அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் ளெியாகி உள்ளது. அவரை தொடர்ந்து மகிழ்திருமேனி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விடவே அஜித்தின் 62 வது படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு மகிழ்திருமேனி, தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.