சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா?
ADDED : 979 days ago
சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் அமைத்து அதில் வரலாற்று சம்பவங்கள் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில், இப்படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் ஒரு முக்கிய வேடத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா மறுத்திருக்கிறார். சூர்யா 42 வது படத்தில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தியாகும். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டு இருக்கிறார்.