90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி
ADDED : 1008 days ago
நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.