ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா'
ADDED : 974 days ago
மலையாளத்தில் 11 ஆண்டுகளாக நடித்து முன்னணி நடிகராக திகழும் துல்கர் சல்மான், தற்போது ‛கிங் ஆப் கோதா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‛செகண்ட் ஷோ' படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் இணைந்துள்ளார் துல்கர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தின் காரைக்குடியில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.