42வது படத்திற்காக தீவிர வொர்க் அவுட்டில் இறங்கிய சூர்யா!
ADDED : 967 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் 13 கெட்டப்புகளில் நடிக்கிறார் சூர்யா. 10 மொழிகளில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சரித்திர கதையில் உருவாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை படமாக்க தயாராகி வருகிறார் சிறுத்தை சிவா.
அதனால் தனது உடலை பிட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுகிறார் சூர்யா. அதற்காக ஜிம்மில் அவர் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோவை அப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.