ஷாருக்கானின் ஜவான் படம் : விஜய்க்கு பதில் அல்லு அர்ஜுன்
ADDED : 1010 days ago
தமிழில் விஜய் நடித்த பிகில் படத்தை கடைசியாக இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பல நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் லியோ படத்தில் விஜய் பிசியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் இப்போது அந்த வேடத்தில் அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கமிட்டாகி இருக்கிறார். விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போன்று ஒரு அதிரடியான வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்க போகிறாராம் அட்லி.