லால் சலாம் படத்திற்கு 7 நாட்கள் கால்சீட் கொடுத்த ரஜினி
ADDED : 1098 days ago
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், லால் சலாம் என்ற ஒரு முஸ்லிம் வேடத்தில் நடிக்கிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு பாட்ஷா படத்தில் முஸ்லிமாக நடித்த ரஜினி அதன் பிறகு இப்போது மீண்டும் அப்படி ஒரு இடத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு ஏழு நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கும் ரஜினி இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.