ஷெரினுக்கு ரீ-என்ட்ரி கிடைக்குமா?
ADDED : 964 days ago
இளமை ததும்பும் அழகுடன் துள்ளுவதோ இளமை படத்தில் என்ட்ரி கொடுத்த ஷெரின் ஷிருங்கார், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிர்ஷ்டமோ அவருக்கு எதிராக செயல்பட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து பீல்ட்-அவுட்டானார். ஷெரினை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்துள்ள ஷெரின் இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற உடையில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போதும் செர்ரி பழம் போல் கண்களை பறிக்கும் அழகு கொண்ட ஷெரினுக்கு வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி சாத்தியாமாகுமா? என அவரது ரசிகர்கள் ஏக்கமாக எதிர்பார்த்து வருகின்றனர்.