உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழம்பெரும் நடிகரின் பங்களாவை கையகப்படுத்தியது 'காத்ரேஜ்'

பழம்பெரும் நடிகரின் பங்களாவை கையகப்படுத்தியது 'காத்ரேஜ்'

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பங்களாவை, 'காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ்' நிறுவனம் கையகப்படுத்துகிறது. இங்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மும்பையில் உள்ள செம்பூரில் அமைந்துள்ள மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ் கபூருக்கு சொந்தமான பங்களாவை, அவரது வாரிசுகளான கபூர் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளதாக காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ் தெரிவித்துள்ளது.



இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரோஜ்ஷா காத்ரேஜ் கூறியதாவது: நிலத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர். இந்த நிலத்தில் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !